×

அமைச்சரிடம் முறையீட்டை தொடர்ந்து சாலை வரிக்கான அபராத தொகை ரத்து: மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து அல்லாத இயந்திரங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான சாலை வரியை ஜூன் 30ம் தேதிக்குள் செலுத்த கூறியது. ஆனால், செலுத்தாத 3 மாதங்களுக்கான சாலை வரிக்கு 100 சதவீத வரியும், அதற்கு அடுத்துள்ள 3 மாதங்களுக்கான சாலை வரியையும் சேர்த்து செலுத்தும் வகையில் வந்துள்ளது. இதனால் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் பல ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அபராத தொகையை செலுத்துவது அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

எனவே மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்க பொதுச் செயலாளர் கத்திப்பாரா ஜெ.விவேக் தலைமையில் சங்கத்தினர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து பேசினர். அடுத்த மாதம் 30ம்தேதி வரை சாலை வரியை அபராதம் இன்றி செலுத்த வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அபராத தொகையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த பேச்சுவார்த்தையில், சங்க நிர்வாகிகள், ராஜசேகரன், குணசேகரன், ரவி ராஜா, சுகுமாரன், மணலி பாண்டியன், கணேஷ், ஏழுமலை, அத்திப்பட்டு கார்த்திகேயன், முகமது பயாஸ், எண்ணூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : owners ,Cancellation ,Minister , Minister, Road Tax, Penalty, Cancellation, Soil Survey, Machine Owners, Information
× RELATED தூத்துக்குடியில் மீனவர்கள் திடீர் மறியல்