சொகுசு காருக்குள் பாலியல் தொழில்: 3 பேர் கைது

வேளச்சேரி: வேளச்சேரி பகுதியில் ஒரு சொகுசு காருக்குள் வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக நேற்று முன்தினம் வேளச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேளச்சேரி பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு சொகுசு கார் நீண்ட நேரம் நின்றிருப்பதை கண்டு சந்தேகித்தனர். காருக்குள் சோதனை செய்தபோது அதில் 2 பெண்கள் இருந்தனர். மற்றொரு காரில் 3 ஆண்கள் இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சேர்ந்த மோகன் (33), சுந்தர் (28), ராஜேஷ் (31) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும், சில பெண்களை கோவிலம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாக கூறினர். அவர்கள் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று 5 பெண்களை மீட்டனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொழில் நடத்திய 3 வாலிபர்களை கைது செய்தனர். பிடிபட்ட 7 பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories:

>