×

டிவி விவாதத்தில் பங்கேற்ற காங். தலைவர் மாரடைப்பில் மரணம்

புதுடெல்லி: டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜிவ் தியாகி திடீர் மாரடைப்பில் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான ராஜிவ் தியாகி(50) நேற்று டிவி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தியாகி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தியாகியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : TV Debate, Participate, Cong. Head, heart attack, death
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...