மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஜிடிபி சரிவு குறித்து ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: ‘நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்மறையாக இருக்கலாம்,’ என கடந்த வாரம் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார். இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, ‘நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, சுதந்திரம் பெற்றதில் இருந்து இல்லாத வகையில் மிக குறைந்த வளர்ச்சியை எட்டக்கூடும்,’ என அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜ தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது பாஜ அரசு பயன்படுத்திய “மோடி ஹை மும்பின் ஹை” என்ற ‘மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்,’ என்ற முழக்கத்தை ஜிடிபி வளர்ச்சி விகித சரிவிற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்,’ என பதிவிட்டு ‘இன்போசிஸ் நிறுவனரின் ஜிடிபி வளர்ச்சி சுதந்திரம் பெற்றதில் இருந்து இல்லாத வகையில் குறையக்கூடும்,’ என குறிப்பிட்ட செய்தியையும் இணைத்துள்ளார்.

Related Stories: