அமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா

வாஷிங்டன்: உலகளவில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு அரை கோடியை தாண்டிய நிலையிலும், பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. பல மாகாணங்களில் பள்ளிகள் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர் களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 4ல் ஒரு பங்கு கடந்த 2 வாரத்தில் ஏற்பட்டுள்ளது. இதுவரை 25 குழந்தைகள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். எனவே, பள்ளிகள் திறப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய தன் அவசியத்தை இது உணர்த்தி யுள்ளதாக மருத்துவ நிபுணர் கள் வலியுறுத்தி உள்ளனர்.

* இந்தியாவில் 23 லட்சம்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. நேற்று மட்டும் 60,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 23,29,638 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 46,091 ஆகவும், நேற்றைய ஒருநாள் இறப்பு 834 ஆகவும் உள்ளது.

* ஆயுஷ் அமைச்சருக்கு பாதிப்பு

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான் உட்பட 3 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கும் நேற்று தொற்று உறதியானது. இதனால், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: