உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம் 17ம் தேதி வரை நீட்டிப்பு: அதிமுக அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10ம் தேதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை தலைமை கழகத்தில் சேர்ப்பதற்கான காலக்கெடு 17ம் தேதி (திங்கட்கிழமை )வரை நீட்டிக்கப்படுகிறது.ஆகவே, மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பயன்படுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Stories:

>