சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம், ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (24). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரி பிச்சிவாக்கம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால், கண்ணன், அங்கு கட்டுமான வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், சகோதரியின் வீட்டின் அருகில் வசிக்கு 11 மற்றும் 6 வயது சிறுமிகளிடம் கண்ணன் தொடர்ந்து பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமிகள், தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து பெற்றோர், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்தனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மேல்துாளி கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் (48). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீரராகவன், மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீரராகவன், சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய்யை, தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டர். உடல் முழுவதும் தீ பரவியதில், அவர் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர், ஓடிவந்து அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றிவீரராகவன் இறந்தார். புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>