×

2022 வரை சிஎஸ்கேவில் எம்எஸ்டி...

டோனி எங்கள் அணியின் அச்சாணி. புகழ்பெற்ற  திறமையான பேட்ஸ்மேன், வீக்கெட் கீப்பர். விரைவில் ஓய்வு பெற மாட்டார் என்று நம்புகிறோம். அவர் குறித்து கவலைப்பட ஏதுமில்லை. 2020, 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களில் மட்டுமல்ல 2022 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கேவின் அங்கமாக தொடர்வார் என்று எதிர்பார்க்கிறோம். டோனி சொந்த ஊரில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் இருந்துதான் தெரிந்து கொண்டேன். அவர் தனது பொறுப்புகளை உணர்ந்தவர். அவர் தன்னையும், தனது அணியையும் கவனித்துக் கொள்வார் - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்.

* நாளை வருகை
சிஎஸ்கே கேப்டன் டோனி உட்பட வீரர்கள் அனைவரும் நாளை சென்னை வந்து சேர்கின்றனர். உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். பின்னர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர். முடிவுகளைப் பொருத்து வீரர்களுக்கு சென்னையில் முதல் கட்ட பயிற்சி நடக்கும். அதன் பிறகு சிஎஸ்கே அணி ஆக.22ல் யுஏஇ புறப்பட்டுச் செல்லும்.

* சாதனை டோனி
ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக டோனி தொடர்கிறார். இதுவரை 3 முறை சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதிக முறை பைனலில் விளையாடிய ஐபிஎல் அணியாகவும் சிஎஸ்கே விளங்குவதற்கு டோனியின் பங்களிப்பு முக்கியமானது. கூடவே விளையாடிய எல்லா தொடர்களிலும் தகுதிச்சுறுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற பெருமையும் சிஎஸ்கேவுக்கு உரியது. சென்னை அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தபோது புனே அணிக்காக டோனி விளையாடினார். அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 190 போட்டிகளில் விளையாடி 4432ரன் குவித்துள்ளார். கூடவே விக்கெட் கீப்பராக 98 கேட்ச், 21 ரன்அவுட்,38 ஸ்டம்பிங் செய்து 157 விக்கெட் வீழ காரணமாக இருந்துள்ளார்.


Tags : CSK , Until 2022, CSK, MST ...
× RELATED இரண்டாவது வெற்றி பெறுமா சிஎஸ்கே? ராயல்சுடன் இன்று மோதல்