ஆசை வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்ற வாலிபர் கைது

பூந்தமல்லி: திருவேற்காட்டில் 10ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு செல்வகணபதி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை மணிகண்டன் அழைத்துச் சென்று விட்டதாக மாணவியின் பெற்றோர் திருவேற்காடு போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டில் மாணவியுடன் மணிகண்டன் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories:

>