×

7 நாள்தான் கலெக்டர் வெச்சுக்க சொல்லி இருக்காரு... கொரோனா இருந்தாலும் வீட்டுக்குதான் போகணும்... இல்லைனா டிஸ்சார்ஜ் சம்மரி கிடைக்காது... நோயாளிகளை செவிலியர் மிரட்டும் வீடியோ வைரல்

மயிலாடுதுறை: கொரோனா இருந்தாலும் வீட்டுக்குதான் போகணும் என்று நோயாளிகளை செவிலியர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டு உள்ளது. இங்கு இதுவரை 400க்கும் மேற்பட்ட கொரோனா பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் 20 நபரிலிருந்து 50 நபர் வரை சிகிச்சைக்காக மயிலாடுதுறைக்கு வருகின்றனர். இங்கு இட வசதி இல்லாமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது. இதனால், அங்கு கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களிடம் 7 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு சென்று விடுங்கள்.

மீண்டும் எடுக்கப்படும் சோதனையில் தொற்று இருந்தால் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும்என மாவட்ட ஆட்சியரே சொல்லிவிட்டார். இல்லையென்றால் டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் கிடைக்காது என நோயாளிகளை ஒரு பெண் செவிலியர் மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோ உரையாடல் வருமாறு:
செவிலியர்: ஸ்வாப் டெஸ்ட் வரும்ல. அந்த டாக்டர் கிட்ட பேசிட்டேன். உங்களுக்கு நாளைக்கு பாசிட்டிவ் என வந்தாலும் நீங்கள் வீட்டிற்குதான் போக வேண்டும். இங்க இருக்க கூடாது. கலெக்டரே சொல்லிட்டாராம். ஏன்னா இடம் இல்ல. புதுசு புதுசா வரதால இடம் இல்ல. ஹோம் குவாரன்டைன்தான்னு சொல்லியிருக்காங்க. உங்களுக்கு பாசிட்டிவ்னு வந்தாலுமே நாளைக்கு உங்கள் வீட்டிற்குதான் அனுப்புவாங்க. பாசிட்டிவ் வந்தாலும், நெகட்டிவ் வந்தாலும் நீங்க வீட்டிற்குதான் போக வேண்டும். வீட்டில் போய் தனிமையாக இருங்க.

பெண்: எங்களை வீட்டிற்குள் விட மாட்டங்களே.

செலிவியர்: உங்கள வீட்டிற்குள் விடலனா, நாங்க என்ன பண்றது. வீட்டிற்கு போய் தனியா இருக்கணும். இதற்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் எங்கள ஊருக்குள் விட மாட்டாங்க. உங்களுக்கே தெரியும் வீட்டில் எப்படி தனியாக இருக்க முடியும் என்று மாறி மாறி கேள்வி எழுப்புகின்றனர். அப்போது, இன்னொருவர் இதுநாள் வரை அனைவருக்கும் ரிசல்ட் கரெக்ட்டா கொடுத்தீங்க. எங்களுக்கு மட்டும் 3 நாள் ஆச்சு. இதுவரைக்கும் தரல என்று கேள்வி எழுப்புகிறார்.

செவிலியர்: நான் சொன்னது புரிஞ்சுதா.

சிகிச்சை பெறுபவர்: புரியவே இல்லை.

செவிலியர்: பாசிட்டிவ்னு வந்தாலுமே 14 நாள் வீட்டில தனிமையில் இருக்கணும். சிகிச்சை பெறுபவர்: பார்மை (டிஸ்சார்ஜ் சம்மரி) காட்டினா விட மாட்டாங்க மேடம். நெகட்டிவ்னு வந்தாதான் ஊருக்குள்ள விடுவாங்க.

செவிலியர்: அதில்லப்பா பாசிட்டிவ்னு வந்தாலுமே 10ம் நாள் வீட்டிற்கு அனுப்பி விடுவாங்க. ‘யார் விடமாட்டா’. ரமேஷுங்கிறது யாரு, இங்கே வா, அதான் சொன்னல்ல, ஆப்டர் ட்ரீட்மென்டில் பாசிட்டிவ்னு வந்தாலும் ஹோம் குவாரன்டைன்தான். இங்கே இருக்க முடியாது. டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க. 7 நாள் மட்டும்தான். கேளுப்பா, (ஒரே இரைச்சல்) ஏம்பா நான் சொல்றத கேட்கிறியா நீ.

சிகிச்சை பெறுபவர்: என்கூட வந்தவங்கல்ல சில பேரு இருக்காங்க. அவங்களையும் அனுப்புங்க. என்னை மட்டும்தான் கூப்பிட்டு இருக்கீங்க.

செவிலியர்: அத டாக்டருகிட்ட பேசு. அட்மிஷன் டேட்டில் இருந்து 7 நாள்தான் கலெக்டர் வெச்சு இருக்க சொல்லி இருக்காங்க. அதுக்கு அப்புறம் பாசிட்டிவ் வந்தாலும், நெகட்டிவ் வந்தாலும் ஹோம் குவாரன்டைன்தான். (அப்போது, நோயாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்). சந்தேகம்னா டாக்டருகிட்ட கேளுங்க. அப்போது ஒரு மூதாட்டி, இன்னியோட 16 நாள் ஆகுது. அப்புறம் எங்க 7 நாள் வெச்சு அனுப்புச்சீவிட்டாங்க என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த செவிலியர், ‘‘பாட்டிமா நீங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் டாக்டர் பதில் கூறுவாங்க. சரியா’’ என்று மிரட்டும் தொனியில் பதிலளித்தார். தொடர்ந்து, நோயாளிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், செவிலியர் ஆத்திரமடைந்தார்.

செவிலியர்: சீட்டை வாங்கிக்கிங்க.. கேளுங்க டிஸ்சார்ஜ் சீட்டை கையில் வாங்கலனால் எம்ஆர்டிக்கு அனுப்பிடுவேன். ஒரு மாசம் இல்ல, இரண்டு மாசம் இல்ல. நீங்க எவ்வளவு அலைஞ்சாலும் கையில கிடைக்காது. தபாலில் அனுப்பி விடுவோம். யாருக்கு சீட்டு தேவையோ சொல்லுங்க சிஎம்ஓகிட்ட கையெழுத்து வாங்கி தர்ரேன். உங்களுக்கு என்ன டவுட் இருந்தாலும் சீட்டை கையில வாங்கிட்டு பேசுங்க. சிகிச்சை பெறுபவர்: சளினு காரணம் காட்டி கொரோனானு தூக்கிட்டு வந்து வெச்சுட்டு எங்களை மிரட்டுறீங்க இப்போ.

செவவிலியர்: நாங்க மிரட்டல்லாம் இல்ல.

சிகிச்சை பெறுபவர்: நீங்க பேசுறத பார்த்த மிரட்டுறா மாறிதான் இருக்கு.

செவிலியர்: கேளுங்க. டாக்டர் டிஸ்சார்ஜ் பேசன்ட் கேட்டு இருக்காங்க.. இதெல்லாம் அங்க போய்டுச்சுனா வராது.

சிகிச்சை பெறுபவர்: நான் பாங்க்ல வெர்க் பண்றேன். டிஸ்சார்ஜ் சம்மரியை எச்ஆர் கிட்ட சம்மிட் பண்ணணும். பாசிட்டிவ் வந்ததற்கு எதுவும் இல்ல.

செவிலியர்: 3 ஸ்வாப் டெஸ்ட் எடுத்தீருக்கீங்களா. சிகிச்சை பெறுபவர்: இரண்டு டெஸ்ட் எடுத்துள்ளேன். இரண்டாவது டெஸ்ட் ரிசல்ட் வரல.

செவிலியர்: இரண்டாவது டெஸ்ட் பாசிடிவ்னு வந்தாலும்கூட நீங்க ஹோம் குவாரண்டைலதான் இருக்க வேண்டும். இவ்வாறு உரையாடல் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஜுலை 30ம் தேதி நாகை மற்றும் மயிலாடுதுறையில் மாவட்டம் பிரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட நாகை எம்.பி, மயிலாடுதுறை எம்பி. பூம்புகார் எம்எல்ஏ, தனி அதிகாரியின் வாகன ஓட்டுனர் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 6 நபர்களுக்கும், நேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சாமிநாதனுக்கும் தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : collector ,home ,nurse , Corona, Discharge Summary, Patient, Nurse
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...