புதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த செவ்வாய்கிழமைகளில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டு காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 41.78 சதவீத கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,381 ஆகவும் உயிரிழப்பு 96 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாகக் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று அதிகபட்சமாக 1,123 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 413 பேர், ஏனாமில் 67 பேர், மாஹேவில் ஒருவர் என 481 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: