×

மகாராஷ்டிராவில் அகோர கிருமி தாண்டவம்: இன்று அதிகபட்சமாக 12,712 பேருக்கு கொரோனா; மாநில சுகாதாரத்துறை தகவல்...!!!

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா தொற்று முன்பை விட பலமடங்கு அதிகரித்து கொண்டு வருகிறது. நாள்தோறும் 55 ஆயிரத்துக்கும் மேறபட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மேலும் இந்த உச்சக்கட்ட  கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தினந்தோறும் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் இன்று மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 12,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,313-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 344 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,650-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 13,408 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,81,843-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மருத்துவமனைகளில் 1,47,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Tags : Corona ,Maharashtra ,State Health Department , Maharashtra, Corona, State Health Department
× RELATED 108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள...