மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி: தொடர்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி..!!

டெல்லி: கொரோனா தொற்றின் அடுத்த பாய்ச்சலாக எம்.எல். ஏ. க்கள், அமைச்சர்களை குறிவைக்கிறது. இந்த கட்டத்தில் மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியானதால் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை பரிசோதித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் பரவி வரும் கொரோனா முன்பை விட தற்போது பெருமளவில் நாள் ஒன்றுக்கு 55 ஆயிரத்துக்கும் மேலான தொற்று ஏற்படும் வண்ணம் உள்ளது.

இதில் முக்கியமாக மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சி தரும் விஷயமாக அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் என கொரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. முக்கியமாக  தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட  எம்.எல். ஏ. களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: