தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: கொரோனா நோயாளிகளை கண்டறிய மருத்துவ முகாம்கள் உதவும்: தலைமைச் செயலாளர் பேட்டி...!!!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். நாடு முழுக்க தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான 7ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பிற மாநிலங்களில் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ பாஸ் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவசர தேவைக்காக பாஸ் கேட்டு விண்ணப்பிப்பதற்கு கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனால் பல மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த புகார்களை தொடர்ந்து இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் முழுவதும் இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும். மேலும், இ பாஸ் வழங்குவதில்  குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்; நோய்த் தொற்று அறிகுறி தோன்றுவதற்கு முன்பே நோயாளிகளை கண்டறிய முகாம்கள் உதவும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: