பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்....! எனக்கு இந்தி தெரிந்தால் தான், என்னால் மொழிமாற்றம் செய்ய முடியும்; கனிமொழி எம்.பி.பேட்டி

சென்னை: எந்த பொது மேடையிலும் நான் மொழிபெயர்ப்பு செய்ததில்லை; இந்தி தெரிந்தால் தான் இந்தியர்கள் என கூறுவதை ஏற்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். அப்படி மொழி பெயர்த்திருந்தால் நிரூபியுங்கள். நான் படித்த பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் நான் கற்றுக்கொண்டேன். இந்தி தெரிந்தால்தான் மொழி பெயர்க்க முடியும். எனக்கு இந்தி தெரியாது எனவும் கூறினார். சென்னை விமானநிலையத்தில் தி.மு.க கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த அவர், ‘நமது உணர்வுகளை புரிந்துகொண்டு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பிரச்சனைகள் அரசு அலுவலகங்கள், குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய பிரச்சினையாக உள்ளது. எல்லா இடங்களிலும் இது போன்ற மனப்பான்மைகளை சரி செய்தால் சாதாரண மனிதர்களுக்கும் அவர்களும் இந்தியர்கள் என்ற உணர்வை நிச்சயமாக ஏற்படுத்தும். மாநிலத்தின் உரிமைகளையும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மொழிக்கும் இந்த நாட்டில் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை தரும். எனக்கு இந்தி தெரிந்தால் தான், என்னால் மொழிமாற்றம் செய்ய முடியும்.

நான் படித்த பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிதான். இந்த இரண்டு மொழிகளிலும் தான் நான் படித்தேன். டெல்லிக்குச் சென்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் நான் இன்னும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை. ஆதாரம் இருந்தால் தேவசகாயம் நிரூபிக்கட்டும். இந்தி தெரிந்தால் தான் இந்தியர்களாக இருக்க முடியும் என்று கூறுவது எவ்வளவு பெரிய அவமானம். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இதே போன்ற நிலைமை தனக்கும் நேர்ந்திருக்கிறது என்று இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தி தெரிந்தால் தான் இந்தியாவில் இருக்க முடியும். ஒரு மதத்தை பின்பற்றினால் தான் உன்னை ஏற்றுக் கொள்வோம் என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என்று தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் தான் போட்டி என தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்ற வி.பி.துரைசாமி கூறியதைப் பற்றி கேட்டதற்கு சிலபேர் கனவு உலகத்தில் வாழ வேண்டுமென்றால் வாழட்டும் அதைப்பற்றி கவலையில்லை’என்று தெரிவித்தார்.

Related Stories: