×

காவு வாங்க காத்திருக்கும் பள்ளம்

கம்பம்: கம்பத்தில் சாலையின் நடுவில் திறந்த நிலையில் உள்ள கால்வாயை மூடி போட்டு அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கம்பம் ஓடைக்கரை தெருவில் போக்குவரத்து போலீஸ் நிழற்குடை உள்ளது. இதனருகே திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் கால்வாய்க்குள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள கால்வாய்க்கு, உடனடியாக மூடி போட்டு அடைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kavu , Cumbum, dent
× RELATED அடிக்கடி விபத்து நடக்கிறது காவு...