×

குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவில் சர்வதேச நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க நிதின் கட்கரி வலியுறுத்தல்

டெல்லி: இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவில் சர்வதேச நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். சாலைப்பாதுகாப்புப் பிரிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கெனவே ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பு சாலைகளின் சிறந்த வடிவமைப்பு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு வாய்ப்புகளை வழங்கி வருகிறது என அவர் கூறினார். இந்திய சாலைப்பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 21000 கி.மீ சாலைகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் 50% சாலை விபத்துக்களைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2030ஆம் ஆண்டு வாக்கில் சாலை விபத்து இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது நமது நோக்கமாகும் என்று கட்கரி கூறினார். இந்தப் பிரச்சாரத்துக்காக, உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் தலா ரூ.7000 கோடி வழங்க உறுதியளித்துள்ளன.

சமூக விழிப்புணர்வு, கல்வி, அவசரகாலச் சேவைகளில் முன்னேற்றம், மருத்துவக் காப்பீடு அறிவுறுத்தல், அதிக மருத்துவமனை வசதி உள்ளிட்டவை சாலைப்பாதுகாப்பு இலக்குகளை நோக்கி நாடு முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். கிராமங்கள், விவசாயம், பழங்குடியினர் பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார். வருங்காலத்தில், இந்தியாவின் பொருளாதாரத்தை எம்எஸ்எம்இ பிரிவு முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.Tags : Nitin Gadkari ,companies ,enterprises , Nitin Gadkari, Investment
× RELATED நிதின் கட்கரிக்கு கொரோனா