×

பாகிஸ்தானுக்கு கடன் மற்றும் கச்சா எண்ணெய் வழங்கப்படாது: சவுதி அரேபியா அறிவிப்பு

ரியாத்: பாகிஸ்தானுக்கு கடன் மற்றும் கச்சா எண்ணெய் வழங்கப்படாது என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியதற்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகுமது குரேஷி கருத்து தெரிவித்திருந்தார்.

அதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்த 300 கோடி டாலர் கடனுதவி மற்றும் 320 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஏற்கனவே அளித்த 100 கோடி டாலரையும் திருப்பி அளிக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.



Tags : Pakistan ,Saudi Arabia , Saudi Arabia, Pakistan
× RELATED வரலாற்றில் முதல்முறையாக பிரபஞ்ச...