×

டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை : ரூ.1000 கோடி மதிப்பிலான ஹவாலா மோசடி நடந்திருப்பது கண்டுபிடிப்பு!!

புதுடெல்லி:சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.இதைத்தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 40 போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.1000 கோடி மதிப்பிலான ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும், வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு இதில் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் டாலர் மற்றும் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு கரன்ஸிகளிலும் ஹவாலா பணப் பரிமாற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

ஹவாலா பணப் பரிமாற்றங்கள் தொடர்பான டாக்குமெண்ட்கள், பணச் சலவை தொடர்பான டாக்குமெண்ட்கள் இந்த சோதனை மூலம் கிடைத்து உள்ளது. மேலும், ஹவாலா மோசடியில் வங்கி ஊழியர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு தொடர்பு இருப்பது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Tags : companies ,Delhi ,Chinese , Delhi, Chinese companies, income tax department, check, Rs.1000 crore, hawala, fraud
× RELATED தேர்தல் பத்திரத்தில் மேலும் ஒரு ஊழல் அம்பலம் : காங்கிரஸ்