2022 கத்தார் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பு!

கத்தார் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், பூங்காங்கள்,நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் இந்த மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள், தேசிய, மாநில, மாவட்ட அளவிலான அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஃபிஃபா கத்தார் உலக கோப்பை கால்பந்து 2022-லும், ஆசிய கோப்பை கால்பந்து 2020-லும் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை  ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து எடுத்துள்ளது.

Related Stories: