மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்.. சர்வதேச இளைஞர் தினத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து!!

சென்னை :  சர்வதேச இளைஞர் தினத்திற்கு மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆகஸ்டு 12-ம் தேதி உலக இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் தினமாக இதனை உலகநாடுகள் கொண்டாடுகின்றன.1999-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆகஸ்டு 12-ஆம் தேதியை உலக இளைஞர் தினமாக கொண்டாட அறிவித்தது. இந்த நாளில் உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு உள்ள பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளும் இந்த நாள் மூலமாக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், சிறப்பான எதிர்காலத்தை திட்டமிடுதல் மற்றும் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாளையின் முன்னறிவிப்பாளர்கள், மூதறிஞர்கள், முன்னோடிகள்,  இளைஞர்கள் தான். அவர்களின் அறிவு,  பசியோடும், கேள்விகளோடும் திளைத்திருக்க இளைஞர் தின வாழ்த்துக்கள்.

மாற்றத்திற்கான விதை இளைஞர்கள் தான்.

நாளை நமதே.எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,நூலகங்களின் வடிவம் மாறலாம். தேவை என்றும் மாறாது. நம் இனத்தின் அறிவும், புரிதலும் மட்டுமே நம் இனத்தை முன்னோக்கி நகர்த்தும்.

தொழில் நுட்பங்கள் எத்தனை மாறினாலும் நூலகத்தின் தேவை மாறாது. எழுத்து உருவாகும் முன் ஆசிரியர்களே நூலகங்களாய் வாழ்ந்தார்கள், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: