×

இந்தியா - நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்து வரும் 17 ம் தேதி பேச்சுவார்த்தை!: வரைபட சர்ச்சைக்கு மத்தியில் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்பு..!!

காத்மாண்டு: வரைபட சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா - நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் 17 ம் தேதி நடைபெறவுள்ளது. நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இந்திய பகுதிகளை தங்களது நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தினை உருவாக்கினார். இதனால் நீண்ட காலமாக இருந்து வந்த இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ராமர் இந்தியாவில்  பிறக்கவில்லை என்றும், நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதுபோன்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்தியா - நேபாளம் இடையே வளர்ச்சி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் 17 ம் தேதி நடைபெறவுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா, நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் பைராகியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா கடந்த 2019 - 2020ம் பட்ஜெட்டின் போது நேபாளத்திற்காக 1200 கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் திங்கட்கிழமை 17 ம்தேதி எட்டாவது கூட்டமாக இது நடைபெறுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறி தெரிவித்திருப்பதாவது: இந்த சந்திப்பு இந்தியாவிற்கும், நேபாளத்துக்கும் இடையிலான வழக்கமான தொடர்புகளின் ஒரு பகுதியாகும். கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து இரு தரப்பிலும் சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான் என கூறினர். மேலும் இருதரப்பு பொருளாதார மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் இது போன்ற கூட்டங்கள் நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : talks ,Nepal ,India ,countries ,Tindivanam , Man arrested , money laundering,Tindivanam,
× RELATED பள்ளி பாட புத்தகங்களில் இந்திய...