தண்டவாளத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரை 4 பெட்டிகளுடன் அதிவேக இரயிலை இயக்கி சோதனை!!!

திருச்சி:  கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் சேவையானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தண்டவாளத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்யக்கூடிய வகையில் திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரை அதிவேக இரயிலை இயக்கி சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இந்த சோதனையானது மாதந்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. இதனையடுத்து இந்த இரயிலானது அதிவேகமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரயிலில் உள்ள 4 பெட்டிகளும் லக்னோவில் செய்யப்பட்டவையாகும்.  கொரோனா ஊரடங்கு காரணமாக இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தண்டவாளங்கள் மற்றும் இரயில்கள் நல்ல நிலையில் உள்ளன என்பதை உறுதி செய்வதற்காக தற்போது திருச்சி-ராமேஸ்வரம் இடையே  அதிவேக இரயிலை இயக்கி ஆய்வானது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று காலை 4 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த இரயில் புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்தை மதியம் 2 மணியளவில் சென்றடையும் என கூறப்படுகிறது. இவ்வாறு செல்லும்போது தண்டவாளத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகள் அதனை சரிசெய்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து வந்த அதிகாரிகள் இரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த ஆய்வானது, தற்போது கொரோனா அதிகமாக உள்ள சூழலிலும் தவறாமல் அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: