×

ஒரே நாளில் 60,963 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது: இதுவரை 46,091 பேர் பலி.!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.29 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 16.39  லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரோனா  நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கையானது 23,29,638 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 16,39,599 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 834 உயிரிழப்புக்கள் பதிவாகி  உள்ளது. உயிரிழந்தவர்களின்  மொத்த எண்ணிக்கையானது 46,091 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 69.80% ஆக உயர்ந்துள்ள  நிலையில், இறப்பு விகிதம் 1.99% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 28.21% ஆக குறைந்துள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

*மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,24,513 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 293 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,050 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6711 பேர் குணமடைந்து மொத்தம் 3,58,421  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,48,042 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று  114  பேர் உயிர் இழந்து மொத்தம் 5,041 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6037 பேர் குணமடைந்து மொத்தம்  2,44,675 பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

*டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,46,134 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 20  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,131 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1070 பேர் குணமடைந்து மொத்தம்  1,31,657 பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 10,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : corona victims ,India , 60,963 people affected in a single day: The number of corona victims in India has crossed 23 lakh: 46,091 people have died so far. !!!
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...