சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலாதேவி ஹாரிஸ் அறிவிப்பு.!!!

வாஷிங்டன்: கடந்த 2016-ம் ஆண்டு  நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிரம்ப் வெற்றிபெற்று, அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி திட்டமிடப்படி நடத்தப்பட உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக, தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாதேவி ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.

தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விரும்பப்படும் செனட்டர்களில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், டிரம்ப்பின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

Related Stories: