கொரோனா கோரத்தாண்டவம்.! 7.44 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!! பாதிப்பு 2.05 கோடியை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.44 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,44,691 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 20,505,144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,427,266 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 64,452 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,328,405 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,188 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,638,101 பேர் குணமடைந்தனர்.  

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 167,749 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,305,957 ஆக அதிகரித்துள்ளது.

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 103,099 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,112,393 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15,131 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897,599 ஆக அதிகரித்துள்ளது.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,276 ஆக அதிகரித்துள்ளது. பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 483,133 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,581 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373,692 ஆக அதிகரித்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,800 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 331,189 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,628 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 312,789 ஆக உயர்ந்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,215 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251,237 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,268 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,530 ஆக அதிகரித்துள்ளது.

* இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,824 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128,776 ஆக அதிகரித்துள்ளது.

* குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,068 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,159 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,973 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,879 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,620 ஆக அதிகரித்துள்ளது.

* சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,353 ஆக அதிகரித்துள்ளது.

* ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,052 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,928 ஆக அதிகரித்துள்ளது.

* மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,103 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில்  பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு  வருகிறது.

Related Stories: