×

பொன்னேரியில் சாலையை சீரமைக்ககோரி மக்கள் நூதன போராட்டம்

பொன்னேரி: பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனாதால் போக்குவரத்திற்கு லாயக்கற்று நிலையில் உள்ளது. இந்நிலையில், 14வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் தெருவில் சிறிய மழைக்கே சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. பல மாதங்களாக இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சாலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, சிலிண்டர் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் தங்களது சாலைக்குள் வர முடியாத அவலநிலை இருப்பதாக தெரிவித்தனர். நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர்.


Tags : road ,Ponneri , Ponneri, road, renovation, people, modern struggle
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...