தமிழகத்தில் லேசான மழை: ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில், வங்கக் கடலில்நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து சென்றது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று வறண்ட வானிலை காணப்படும். தென் மேற்கு பருவ மழை பெய்து வருவதை அடுத்து மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீவேகத்தில் காற்று வீசும். அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Stories: