×

மூன்று நாட்களில் ரூ.1,392 சரிவு தங்கம் சவரனுக்கு ரூ.984 குறைந்தது: இன்னும் விலை குறைய வாய்ப்பு; நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.984 குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை குறையும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை அதிகரித்தது. விலை அதிரடியாக உயர்ந்தது. கடந்த 7ம் தேதி சவரன் ரூ.43,328க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது. அதே நேரத்தில் தங்கம் விலை விரைவில் சவரன் ரூ.50,000ஐ கடக்கும் என்று நகை வியாபாரிகள் கூறி வந்தனர்.

ஆனால், கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை திடீரென குறைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.31 குறைந்து ஒரு கிராம் ரூ.5,385க்கும், சவரனுக்கு ரூ.248 குறைந்து ஒரு சவரன் ரூ.43,080க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்கப்பட்டது. இந்த நிலையில் 2வது நாளான ரூ.ற்று முன்தினம் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,365க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.42,920க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை குறைந்தது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியது. 3வது நாளாக நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவியது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ஒரு கிராம் ரூ.5,242க்கும், சவரனுக்கு ரூ.984 குறைந்து ஒரு சவரன் ரூ.41,936க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக ரூ.984 அளவுக்கு குறைந்துள்ளது நகை வாங்குவோரை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 3 நாட்களில் சவரனுக்கு சுமார் ரூ.1392 அளவுக்கு குறைந்துள்ளது. இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘தங்கம் விலை அதிரடியாக ஏறினால் சின்ன மாற்றம் ஏற்படுவது வழக்கம் தான். இன்னும் 3 நாட்கள் தங்கம் விலை குறையும். அதன் பிறகு விலை உயர தான் வாய்ப்பு உள்ளது” என்றார்.

* விலை சரிவுக்கு காரணம் என்ன?
ரஷ்யா கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது, தற்போதைய தங்கம் விலை சரிவுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது மட்டுமின்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கும் வகையில் அரசு ஊக்க சலுகைகளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கேற்ப, மூலதன ஆதாய வரியை குறைக்க பரிசீலனை செய்து வருவதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதனால் சர்வதேச சந்தைகள் ஏற்றம் கண்டன. இவையும் தங்கம் விலை வீழ்ச்சிக்கு உபரி காரணங்களாக அமைந்து விட்டன. கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் ஒரே நாளில் இந்த அளவுக்கு தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Jewelry buyers , In three days, gold fell by Rs 1,392, shaving by Rs 984
× RELATED இடப்பாகம் கலந்த பொன்னே