பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல்; மேலும் 4 தாலுகாக்களில் விரிவாக்கம்: பதிவுத்துறை தகவல்

சென்னை: பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக  பட்டா மாறுதல் செய்யப்படும் நடைமுறை மேலும் 4 தாலுகாக்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. தற்போது பதிவுத்துறை பட்டா மாறுதலில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டா மாறுதல் ஆகும். அதன்பேரில் முதற்கட்டமாக  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் பட்டா மாறுதல் பெறுவது எளிதாக உள்ளதாக பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வாலாஜாபாத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட நிலையில் மேலும், 4 தாலுகாக்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரம், உத்திரமேரூர், கலவை, நெம்மேலி தாலுகாக்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரே சர்வே எண்களில் உட்பிரிவு இல்லாத சொத்துக்கள் இருந்தால் பத்திர பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.

Related Stories: