×

பிரணாப் முகர்ஜி குணமடைய வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: பிரணாப் முகர்ஜி பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடல்நிலைக் குறைவால் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அதோடு அவருக்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்.

Tags : Pranab Mukherjee ,GK Vasan , Pranab Mukherjee, recover, GK Vasan report
× RELATED நீட் தேர்வை தைரியத்துடன் எழுதுங்கள்: மாணவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து