×

வெளிநாட்டில் இருந்த 297 பேர் சென்னை திரும்பினர்

சென்னை: கொரோனா ஊரடங்கால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் சிக்கி தவித்த 58 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு மீட்பு விமானத்தில் டெல்லி வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். சிங்கப்பூரில் இருந்து 60 பேருடன் நேற்று அதிகாலை சிறப்பு விமானம் சென்னை வந்தது. அதைத் தொடர்ந்து துபாயில் இருந்து 179 பேருடன் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. இந்த விமானங்களில் வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனியார் மற்றும் அரசு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Tags : Chennai. , Abroad, 297, returned to Chennai
× RELATED சென்னையில் மேலும் 1277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி