100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 9ம் தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக இருந்தது. இதனால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 6ம் தேதி 64.20 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 95.6 அடியாக உயர்ந்தது. 5 நாட்களில் 32 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று இரவு 8 மணியளவில் நீர்மட்டம் 96.58 அடியானது. அப்போது, அணைக்கான நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 60.49 டிஎம்சி. இதே நிலையில் நீர்வரத்து தொடர்ந்தால் ஓரிரு நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: