×

கொரோனாவுக்கு மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் சாவு

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டானாகார தெருவை சேர்ந்தவர் சூரி(எ) சூரியகுமார்(50). கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர். இவருக்கு கலா (45) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். எனினும் அவருக்கு காய்ச்சல் குறையாமல், தீவிரமான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சூரி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த தாய் மீனாட்சி(75) அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.


Tags : death ,Corona , Corona, son killed, trauma, maternal death
× RELATED மின் மோட்டாரை பழுது நீக்கியபோது...