கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் 5 கோடி புறநோயாளிகளுக்கு சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மார்ச் 2020 முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 5,09,02,183 பேர் புறநோயாளிகளாகவும், 27,30,864 நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 1,80,571 பிரசவங்களும், 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும், 126 ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தை அவசர சிகிச்சை சேவை மையங்களில் (சீமாங்) 1,29,206 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும், பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 33,374 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: