×

சீனாவில் எனக்கு மோசமான அனுபவம்: ஸ்கேட்டர் ஜெசிகா வேதனை

சிங்கப்பூர்: ஒலிம்பிக் போட்டிக்காக சீனாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள பயிற்சியாளர்கள் முறைகேடாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஜெசிகா ஷுரன் யூ தெரிவித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த ஐஸ் ஸ்கேட்டிங் வீராங்கனை ஜெசிகா ஷுரன் யூ (20). சீனாவில் பிறந்து வளர்ந்த ஜெசிகா இப்போது சிங்கப்பூருக்காக விளையாடி வருகிறார். சிங்கப்பூரின் தேசிய சாம்பியனான ஜெசிகா, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சீனாவில் ஜூலை மாதம் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஜெசிகா உட்பட பல்வேறு நாடுகைளச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இப்போது பகிங்கரப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஜெசிகா கூறியதாவது: சீனாவில் சிறு வயது முதலே பயிற்சியாளர்களின் முறைகேடுகளை பார்த்து வருகிறேன். எனது 11 வயதில் பிளாஸ்டிக் ஸ்கேட் கார்டால் அடி வாங்கி இருக்கிறேன். அது 14வது வயதில் ஸ்கேட்டிங் ஷூவால் அடி வாங்கும் அளவுக்கு அவர்களின் முறைகேடுகள் இருந்தன. பலர் அறுவை சிகிச்சைக்கு ஆளாகும் அளவுக்கு பயிற்சியாளர்கள் வீராங்கனைகளை தாக்கியுள்ளனர். இப்போது ஜூலை மாதம் சீனாவில் நடந்த பயிற்சி முகாமிலும் மாற்றமில்லை. பயிற்சியாளர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற பலரின் கனவுதான் அவர்களின் முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கிறது.

இதுபோன்ற பயிற்சியாளர்கள் மீது சர்வேதச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதை செய்யும் அதிகாரம் ஐஓசிக்கு இருக்கிறது. வெறும் லாபத்தை மட்டும் பார்க்காமல்  வீரர், வீராங்கனைகளை பயிற்சியாளர்களிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கப்பூர் உண்மையான மாற்றங்களை கொண்டு வரத் தயாராக இருக்கிறது. சீனாவிலும் அதுபோன்ற பயனுள்ள மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சீனா மாற வேண்டும். இவ்வாறு ஜெசிகா கூறியுள்ளார். ஜூலை மாத பயிற்சி முகாமில் பங்கேற்ற வீராங்கனைகளிடம் சீனப் பயிற்சியாளர்கள்  முறைகேடாக நடந்து கொண்டதாக இங்கிலாந்து, நியூசிலாந்து, பிரான்ஸ் வீராங்கனைகளும் ஏற்கனவே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Jessica ,China , China, for me, bad experience, skater Jessica, pain
× RELATED தங்கள் நாட்டு எல்லையை சட்ட விரோதமாக...