×

சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வலைப்பயிற்சியின்போது பந்துவீசுவதற்காக மட்டுமே பிரத்யேகமாக 10 பவுலர்களை யுஏஇ அழைத்துச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை சேர்ந்த 6 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
* சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்டது குறித்து தகவல் அளிக்கத் தவறியதால் உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடையை ஓய்வு பெற்ற நீதிபதி முகமது கோக்கர் 18 மாதங்களாகக் குறைத்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதை உமர் அக்மலின் சகோதரர் கம்ரான் அக்மல் கடுமையாக விமர்சித்துள்ளார்.  
* தற்போதுள்ள நிலையில் இந்தியாவின் விராத் கோஹ்லி, ஆஸ்திரேலியாவின் டிம் பெய்ன் இருவரும் உலகின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன்களாக விளங்குகின்றனர் என்று விதர்பா கிரிக்கெட் வீரர் பைஸ் பஸல் பாராட்டி உள்ளார்.

Tags : Roulette, point
× RELATED சில்லிபாயின்ட்..