போக்குவரத்து விதி மீறல் ரூ.20.15 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் 142 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.20.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 142 நாட்களில் 8 லட்சத்து 67 ஆயிரத்து 158 வழக்குகள் பதிவு செய்து, 9 லட்சத்து 57 ஆயிரத்து 743 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சத்து 77 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று வரை 20 கோடியே 15 லட்சத்து 79 ஆயிரத்து 543 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: