×

கொரோனா மரணம் 5 ஆயிரத்தை கடந்தது தமிழகத்தில் 10 நாளில் 1000 பேர் பலி: கோவை, தென்காசி, நெல்லை, விருதுநகரில் அதிகரிப்பு

சென்னை : தமிழகத்தில் 10 நாளில் ஆயிரம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதைத் சேர்த்து மொத்த மரண எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கோவை, தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 5,750 அளவில் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு பலியாகும் நோயாளிகளின் எண்ணிக்க சராசரியாக தற்போது 100ஐ தொட்டுள்ளது. தொற்று குறைந்து வரும் வேளையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது சுகாதாரத்துறையினரை கவனிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 27ம் தேதி மரண எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13ம் தேதி ஆயிரத்தையும், ஜூலை 22ம் தேதி 3 ஆயிரத்தையும் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மரண எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து.
அடுத்த 10 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 10ம் தேதியான பத்தே நாளில் 5 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்தனர்.

தமிழகத்தில் தற்போது சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களான கோவையில் கடந்த ஜூலை 31ம் தேதி 54 மரணங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. ஆகஸ்ட் 10ம் தேதி இந்த எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஜூலை 31ம் தேதி 39 மரணங்கள் பதிவாகி இருந்தது. ஆகஸ்ட் 10ம் தேதி இந்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை 31ம் தேதி 19 மரணங்கள் பதிவாகி இருந்த தென்காசியில் ஆகஸ்ட் 10ம் தேதி 50 மரணங்கள் பதிவாகி உள்ளது. நெல்லையில் ஜூலை 31ம் தேதி வரை 38 மரணங்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 10ம் தேதி 82 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகரில் ஜூலை 31ம் தேதி 85 மரணங்கள் பதிவாகி இருந்தது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட்  10ம் தேதி 139 ஆக உயர்ந்துள்ளது.

80 சதவீதத்தினருக்கு இணை நோய்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சர்க்கரை வியாதி முக்கிய இணை நோயாக உள்ளது. இதற்கு அடுத்த படியாக உயர் ரத்த அழுத்த நோய் உள்ளது.


Tags : Virudhunagar ,Tenkasi ,Nellai ,Corona ,Tamil Nadu ,Coimbatore , Corona death, 5 thousand, Tamil Nadu, 1000 people killed in 10 days: Coimbatore, Tenkasi, Nellai, increase in Virudhunagar
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...