×

மணிப்பூரில் காங். எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா

இம்பால்: மணிப்பூரில் 6 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், பாஜ அரசுக்கு ஆதரவாக 28 எம்எல்ஏ.க்களும் எதிராக 16 எம்எல்ஏ.க்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏ.க்களில் 8 பேர் கொறடா உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால், பாஜ ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக எம்எல்ஏ ஹென்றி சிங் கூறுகையில், “நாங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டோம். ராஜினாமா கடிதங்கள் குறித்து ஆராயப்பட்டது. ஆனால், ராஜினாமா கடிதம் சபாநாயகரால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எம்எல்ஏ பதவியை தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் நாங்கள் ராஜினாமா செய்ய உள்ளோம்,” என்றார்.

Tags : Manipur. , In Manipur, Cong. MLAs, 6, resigned
× RELATED அரசு அனுமதியின்றி இடங்களின் பெயரை...