இன்ஜினியரை தாக்கி வழிப்பறி: 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: சிவில் இன்ஜினியரை கத்தியால் தாக்கி செல்போன், பணத்தை வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே புதுப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). சிவில் இன்ஜினியர். புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு தாம்பரம் அருகே ராயப்பா நகரில் சொந்தமாக இடம் உள்ளது. இங்கு அவர்  வீடு கட்டி வருகிறார். அந்த வீடு சுரேஷ் தலைமையில் கட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு சுரேஷ், முடிச்சூரில் உள்ள ஓட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட சென்றார். பின்னர், மீண்டும் ராயப்பா நகருக்கு புறப்பட்டார். கட்டிட பணி நடக்கும் இடத்தின் அருகே வந்தபோது, அவரை பின் தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 பேர், திடீரென சுரேஷை வழி மறித்து கத்தியால் வெட்டி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.18 ஆயிரத்தை பறித்தனர்.

இதை பார்த்ததும், கட்டிட தொழிலாளர்கள் ஓடி வந்து, கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதில் பார்த்தசாரதி என்பவரை கத்தியால் தாக்கி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.14 ஆயிரத்தை பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பினர்.

புகாரின்படி சோமங்கலம் போலிசார் வழக்குப்பதிவு செய்து, கூடுவாஞ்சேரியை சேர்ந்த நீலகண்டன் (23), மாங்காடு முருகேசன் (23), போரூர் ஆகாஷ் (27), தீனகுமார் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 2 பைக், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: