கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

பொன்னேரி: பொன்னேரி கோட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு பணியில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து மருத்துவர்கள் மூலம் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரணி, நாரவாரிக்குப்பம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம், புழல், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வருவாய் துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டவர்களிடம் அணுகுமுறை அவர்களை தனிமைப்படுத்தும் விதம், தொற்று கண்டறிய உதவுவது, தொற்று பரவாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கலெக்டரின் உத்தரவுபடி தடுப்பு நடவடிக்கையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா தலைமையில் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கு கொண்டனர். 

Related Stories: