×

பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் கொரோனா, டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்படி, கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் மாவட்ட முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அம்மையார்குப்பம் ஊராட்சி உட்பட 38 ஊராட்சிகளில் கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. இதில், அம்மையார்குப்பம் ஊராட்சியில் 12 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேலும், அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.  

இதையடுத்து, ஆட்டோ மூலம் கொசுவை ஒழிப்பதற்காக கொசு மருந்தும் அடிக்கப்பட்டது. இந்த பணியை, வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் ஏ.டி.ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அப்போது, ஊராட்சி மன்ற துணைதலைவர் ஏ.எஸ்.ஜெயந்திசண்முகம், சுகாதார ஆய்வாளர் பாலன், முழு சுகாதர திட்ட ஒருங்கிணைப்பாளர், பால்ஏசுடையான், வார்டு உறுப்பினர்கள் ஏகவள்ளிபழனி, நாகலிங்கம், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளிலும், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளிலும் கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகள் நடந்தன.

Tags : unions ,Pallipattu , Pallipattu, RK Pattai Union, Corona, Dengue Eradication Mission, Intensity
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...