ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பஸ் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதன் மையப்பகுதியில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர பகுதிகளான திருப்பதி, புத்தூர், காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் வந்து அங்கிருந்து புறப்படும் 40க்கும் மேற்பட்ட பஸ்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு சென்று

மேலும், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர எல்லையில் சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பிரதோஷத்திற்கு வருவார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி, பின்னர் கோயிலுக்கும் மற்ற பகுதிகளுக்கும் செல்வார்கள். இந்நிலையில், பயணிகள் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்ல பஸ் நிலையத்தில் வெட்ட வெளியில் நின்று பஸ் ஏறி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இதனால், பஸ் நிலையத்திற்கு மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர். அதன்பேரில், ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைத்து மேம்பாடு செய்ய அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கியது. அதன்படி, பஸ் நிலையத்தில் மேம்பாடு பணிகள் செய்ய நேற்று முன்தினம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் தலைமை எழுத்தர் பங்கஜம் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கினர். கொரோனா ஊரடங்கு முடிந்து போக்குவரத்து தொடங்குவதற்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: