×

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவு

இம்பால்: மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இரவு 7:27 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.0-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நில நடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின சேத விவரம் இன்னும் தெரியவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



Tags : quake ,Manipur , Manipur, earthquake
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...