×

டெல்லி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்...!!!

டெல்லி: டெல்லி மாநிலத்தில் கொரோனா நடுநிலை காலத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மேலும் 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,391 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,139 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று 727 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,384 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 10,868 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,Health Department , Delhi, Corona Infection, Health
× RELATED கொரோனா தொற்றால்...