×

ரஷ்யாவில் இருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

டெல்லி: ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும், இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு நாளை கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பீகார், குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு நாளை முதல் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்த அவர், இந்த நிபுணர் குழு மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

Tags : expert panel ,government ,Russia , Federal government, consult, importing corona vaccine, Russia tomorrow
× RELATED ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த...