×

இந்தியா முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிப்பு: 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு...!!

டெல்லி: இந்தியா முழுவதும் ரயில் சேவை ரத்து மேலும் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டமாக ஊரடங்கு அமலில் இருநஙது வருகிறது. பல்வேறு  தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில் சேவை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், மெட்ரோ என அனைத்து விதமான ரயில்களின் இயக்கங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு ரயில்கள் மட்டுமே தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவையும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருக்கும். மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cancellation ,India ,Central Government , India, Rail service, cancellation
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...