×

தாடிக்கொம்பு அகரத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பொது மயானம்: சீரமைக்கப்படுமா?

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அகரத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் பொது மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்டது அகரம் பிரிவு. இங்குள்ள குடகனாறு ஆற்றங்கரையில் பொது மயானம் உள்ளது. பேரூராட்சி சார்பில், கடந்த 2010ல் ரூ.3 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மயான வளாகத்தில் இறுதி சடங்கு செய்யும் அமர்வு இடம் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பில்லாததால் அமர்வு இடமும், கழிவறையும், சுகாதார வளாகமும் சுகாதாரமின்றி உள்ளது.

இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மின்மோட்டார்கள் இயங்காததால், ஈமசடங்குகள் செய்தவர்கள் குளிப்பதற்கு வசதியில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் மயானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Beardless Public Cemetery ,cemetery , Beard horn, public cemetery, to be rehabilitated?
× RELATED தோகைமலை நெய்தலூர் காலனியில் மயானத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படுமா?