×

சென்னையில் ஒரே மாதத்தில் 90 இடங்களில் வழிப்பறி..!! தலையாய குற்றவாளிகளால் குற்றங்கள் அதிகரிப்பு..!! ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!!!

சென்னை:  சென்னை மாநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 90 இடங்களில் வழிப்பறி கொள்ளைகள் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் சென்னையின் பல பகுதிகளில் தினந்தோறும் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்களிடம் கொள்ளையர்கள் பல்வேறு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்கள் நடமாட்டம் அதிகளவு இல்லாததால்  கொள்ளையர்கள் இலகுவான முறையில் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் கூட்டத்தை குறைக்க பல கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட தொடங்கி இருப்பதே சென்னை போன்ற நகரங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து 90க்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளைகள் நடந்திருந்தாலும், ஒரு சில குற்றவாளிகள் மட்டுமே இதுவரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் வெளியில் நடமாடவே அச்சம் தெரிவிக்கும் பொதுமக்கள் காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : places ,Chennai ,chief criminals , 90 places, one month .. !!, Increase,crimes by chief criminals ,Public demand, intensify patrolling
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு